How To Make Fried Rice

Friday, October 8, 2010
A favorite take-out food, this dish is delicious and fun to prepare and customize with your preferred ingredients. Fried rice makes a great entree or side dish.

You Will Need

  • 4 tbsp. sesame or vegetable oil
  • 2 eggs beaten
  • 2 garlic cloves, minced
  • 1 tsp. grated fresh ginger
  • 4-5 c. pre-cooked long grain rice, refrigerated
  • 2 tbsp. soy sauce
  • 4 tbsp. frozen peas, thawed
  • 1 c. shredded carrots
  • 1 green onion, chopped
  • Salt and pepper
  • Wok
  • Chopsticks
  • Cooked chicken, shrimp, beef, pork, or tofu (optional)
How To Make Fried Rice: Beat the eggs

Step 1: Beat the eggs

Heat 1 teaspoon of oil in your wok. Add the minced garlic and ginger and stir until they’re softened, and then pour in the beaten eggs, scrambling gently.
How To Make Fried Rice: Fold in the rice

Step 2: Fold in the rice

Coat your wok with additional oil and fold in the cold rice, stirring continuously until the rice grains are separated. Then add the soy sauce, a little bit at a time, until the rice is golden brown.
How To Make Fried Rice: Add the vegetables

Step 3: Add the vegetables

Add the peas, carrots, and green onion, and mix thoroughly.
Add your favorite cooked meat or seafood for extra protein and flavor. Use drained, firm tofu, cut into cubes for vegetarian dishes.
How To Make Fried Rice: Continue cooking

Step 4: Continue cooking

Continue cooking over medium-high heat until the vegetables are tender. Season with salt and pepper.
How To Make Fried Rice: Serve the rice

Step 5: Serve the rice

Spoon the rice into bowls. Garnish it with additional green onion and soy sauce, and serve it with chopsticks.





If you like my post give some comments
mathan



Thanks for visit

Spicy Vegetable Kurma


THINGS U NEED:
  • Vegetables (carrot, beans,couliflower,green peas,potato) - 2 cups
  • Onion - 1 big
  • Tomato- 1 big
  • Green chilies -5
  • Ginger -1" piece
  • Ginger garlic paste - 1 teaspoon
  • Bay leaf -1
  • Oil -2 tablespoon
  • Mustard seeds -1 teaspoon
  • chilli powder- 1 1/2teaspoon
  • Coriander powder 1 1/2 teaspoon( add more or less)
  • Garam masala - 1 teaspoon (preparation link)
  • Turmeric powder - 1/2 teaspoon
  • Coconut milk 1/4 cups
  • Salt to taste
TO GRIND:
  • Coconut - 1/2 cup
  • Cashew nuts - one handful (about 10)
  • Poppy seeds -1/2 teaspoon
  • Fennel seeds 1/4 teaspoon
  • Green chillies - 4

METHOD:
  • In a thick bottom vessel, heat oil and splutter mustard seeds. Add bay leaf, onions , green chillies , ginger and ginger garlic paste one by one and fry. Onion should not turn brown color. add the powdered ingredients and fry for few mins. Put the vegetables in this along with the coconut milk ,salt and enough water and cook. When it is half way through add the finely grinded paste (refer TO GRIND ) and choped tomato . Let it cook until done. Add a few curry leaves and coriander leaves at the end for a better aroma and taste !!
NOTES:


U can use the frozen vegetables that are cleaned and cut available in the grocery stores . U can serve this kurma with almost everything!!

 THANKS - kerala kitchen
If you  like this post give some comments
Thanks
mathan

Thanks for visit

தலைவலியை சுக்குநூறாக்கும் சுக்கு!

Monday, October 4, 2010



'தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை... சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை'னு சொல்வாங்க. அது நெசந்தான். சுக்குக்கு அவ்வளவு சக்தி இருக்கு. ஜலதோஷ தலைவலியோ... அதிக வேலையால வந்த தலைவலியோ... உடனே நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து, மையா அரைக்கணும். அதோட சுக்கு துண்டு இழைக்கணும் (அதாவது உரசணும்). அதை, வலி உள்ள எடத்துல பூசினா... சட்டுனு தலைவலி போயிரும். நொச்சி இலை கிடைக்கலைனா... வெறும் தண்ணியில சுக்கை இழைச்சி பூசினாலே பலன் கிடைக்கும்.


இதைப்பத்தி ஏற்கெனவே சொல்லிஇருக்கேன். ஆனாலும் புதுசா வாசிக்கிறவங்களுக்கும் போய்ச்சேரட்டுமேனுதான் திரும்பவும் சொல்றேன்.

"என்ன... பித்தம் தலைக்கு ஏறிடுச்சா?"னு சமயத்துல கிண்டல் பேச்சு எட்டிப் பார்க்கும். பித்தம் இருந்தா... வேலையே ஓடாது. ஏடாகூடாமா எதையாச்சும் செய்வோம். இதுமாதிரியான சமயத்துல, சுக்கை தூள் செஞ்சு, எலுமிச்சைச் சாறுகூட கலந்து குடிங்க. பித்தமாவது, சித்தமாவது... எல்லாம் ஓடிப்போயிரும்.


Posted Image


வாயுக்கோளாறு இருந்தா... சுக்கை இடிச்சி, வெல்லம், தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, வடிகட்டுங்க. அதோட தேவையான அளவு பால் சேர்த்து, சாயந்திர வேளைகள்ல தொடர்ந்து 21 நாள் குடிச்சுட்டு வாங்க. வாயுக்கோளாறு காத்தா பறந்துடும்.

வயிறு மந்தமா இருந்தா... சுக்கு, திப்பிலி, சீரகம், மிளகு, இந்துப்பு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சம அளவு எடுத்துக்கோங்க. அதோட, வறுத்த பெருங்காயத்தைக் கொஞ்சம்போல சேருங்க. மொத்தத்தையும் இடிச்சி சலிச்சு, எடுத்து வைங்க. சாப்பாட்டுக்கு முன்ன அரை ஸ்பூன் அளவு எடுத்து, சுடுசோத்துல பிசைஞ்சு சாப்பிடுங்க. சாப்பிட்டதும் சிலருக்கு வயித்துவலிகூட வரும். அதுதான்... ஜீரண சக்தி கிடைக்குதுங்கறதுக்கு அர்த்தம்.

அடுத்ததா மிளகைப்பற்றி சொல்றேன். 'பத்து மிளகு இருந்தா... பகைவன் வீட்டிலும் உண்ணலாம்'ங்கறது பழமொழி.

வறட்டு இருமல், ஜலதோஷத்தால வரக்கூடிய இருமல் இதெல்லாம் குணமாகறதுக்கு... ஒரு டம்ளர் பசும்பால்ல, அரை ஸ்பூன் மிளகை உடைச்சுப் போட்டு கொதிக்க வச்சு வடிகட்டுங்க. இதை, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்ன, 3 நாள் குடிச்சுட்டு வந்தாலே... நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைக்கம்மல், வயித்துல உண்டாகுற வாயுத்தொல்லை நீங்கறதுக்கு மிளகை நல்லா பொடிச்சி, 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கோங்க. அதோட 600 மில்லி தண்ணி சேர்த்து அரை மணி நேரம் கொதிக்க வச்சு வடிகட்டி வச்சிக்கோங்க. அதில 25 மில்லி அளவுக்கு மூணுவேளை குடிச்சாலே... பிரச்னை சரியாயிரும். ஆகலைனா... இன்னொரு வேளை கூடுதலா குடிங்க.

ஜலதோஷம், தலைவலி, சளிப்பிரச்னையால அவதிப்படுறவங்க... மிளகை தீயில சுட்டு, அதோட புகையை மூக்கால உள்ளுக்கு இழுத்தா... நல்ல நிவாரணம் கிடைக்கும்.



உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்

Thanks for visit

வாழைத் தண்டு மகத்துவம்


வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில்
நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் & கற்களை விடுவிக்கும்.
சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது
மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும்
இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும். 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

வாழைப் பூ மகத்துவம்



வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை
கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய
சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு
பி வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். வாழைப் பூவின்
சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும் என்று
தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?


உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம். அவ்வாறு விரும்பினால்
மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத்
தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.

நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக்
கொள்ள வேண்டும். "நொறுங்கத் தின்று நூறு வயதிரு" என்பது மூதுரையார் வாக்கு. உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி
வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை
பயன்படுத்த வேண்டும். 

நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 




Thanks for visit

அத்திக்காய் மருத்துவ குணம்


அத்திக்காய்

அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி என்றால் சத்து போகின்ற வரை அலம்புவது அல்ல,
ஒரே தடவை அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.
இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது.
பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் அயச் சத்து அதிகமாக இருக்கிறது.


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

தும்பைப் பூ ரகசியம்


தும்பைப் பூ

தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால்
ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு
நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

வெள்ளாட்டுப் பால்


வெள்ளாட்டுப் பால்

வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற
நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின்
சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள். 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

மிளகு இதன் மருத்துவ குணம்


மிளகு
இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து,
நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை மிளகுக் குழம்பு வைத்துச் சாப்பிட்டு வந்தால் கீல் வாயு நோய் குணமாகும். 

நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

சீரகம் இதன் மருத்துவ குணம்



சீரகம்

இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன்
கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும்
ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வல நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும். மயக்கத்தைப் போக்கி
விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும்.

சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். "நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக" என்று
அவர்கள் கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக்
கொடுப்பது உண்டு. 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

மாம்பழம் இதன் மருத்துவ குணம்



மாம்பழம்

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும்
என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின்
ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு
வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை
தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான
கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான
வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.
நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா,
துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா,
கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு,
ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.
 
 
நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

பூண்டு இதன் மருத்துவ குணம்


பூண்டு

உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால், வாயு சம்பந்தமான நோய் நிவர்த்தி அடைகிறது. பூண்டைத் துவையல் செய்தும்
சாப்பிட்டு வரலாம். இரத்தக் கொதிப்பிற்குப் பூண்டைச் சுட்டு இரண்டு மூன்று திரியைக் கொடுத்து வரலாம். வயிற்றுப் போக்கைக்
கட்டுப்படுத்தி விடும். பூண்டு இலேகியமாகவும் செய்து சாப்பிடலாம். இதை நெடுநாள் வைத்திருந்து சாப்பிடலாம். 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை


கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை

கடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான
கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர்
குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌வற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி
உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.

கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.

கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.

கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை
உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி
இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.

கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்

Thanks for visit

எலுமிச்சையின் மருத்துவ குணம்


எலுமிச்சையின் மருத்துவ குணம்

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.

குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட
வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து
சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை
நீக்கி சுத்தப்படுத்தும்.

எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.

தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு
உடல் திறனை வலுப்படுத்துகிறது.

தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.

சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும்.

காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.



நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

நெல்லிக்காயின் மருத்துவ குணம்


நெல்லிக்காயின் மருத்துவ குணம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு
சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு
வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள்
இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய்
சாப்பிடலாம். 


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்



நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து.
இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில்
சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு.
இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக்
கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை
ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு
குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள்,
நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி
அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே
போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை
3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர்,
பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண்,
தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:

* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும்
தன்மையும் இதற்கு உண்டு.

* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.

* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.


நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

இஞ்சியின் மகத்துவம்



இஞ்சியின் மகத்துவம்

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட
மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்
சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து,
ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சியை உணவில் சேருங்கள்:

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும்.
இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும். இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம்.
சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற
உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.
நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 


Thanks for visit

இலந்தைப் பழத்தின் நன்மை


இலந்தைப் பழத்தின் நன்மை

இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும்.
எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.
உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.
கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும். 

நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 



Thanks for visit

கிராம்பின் மருத்துவ குணம்


கிராம்பின் மருத்துவ குணம்

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும்
ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால்
காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும்
வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள
காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி
எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத்
தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. 



நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!


வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு
மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது
எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு
பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின்
அளவு கட்டுக்குள் இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என
3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்,
வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும். மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். 



நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 
Thanks for visit

செவ்வாழை ரகசியம்



செவ்வாழை ரகசியம்

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு
வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக
விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். 

நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 


Thanks for visit
Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector
 
INKU VARUKAITHANTHA ANAIVARUKUM EN MANAMARNTHA _/\_NANRI_/\_ MENDUM VARUKA..  இங்கு வருகைதந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த _/\_ நன்றி_/\_ மீண்டும் வருக..