முகம் பளபளப்பாக....

Monday, September 13, 2010
டோன‌ர்(Toner )
வெள்ளரிக்காய் ஜூஸ் 2டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ்(pores  எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும்




ஸ்கரப்
ஒட்ஸ்( oats)2 டீஸ்பூன்
தேன் 2 டீஸ்பூன்
பாதாம் பவுடர் 1 டிஸ்பூன்
தயிர் 2 டிஸ்பூன்
நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின்  எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும்.



ப்ளீச் (Bleach)
தேன் 2டீஸ்பூன்
லெமன் ஜூஸ் 2டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .

க்லன்சர் (cleanser)
1/4 cup தேன்
சோப் (liquid soap) 1 டீஸ்பூன்
கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன்
மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பரு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் . 

இது எல்லோருக்கும்  நல்ல பயன் உள்ளதாக அமையும் நண்பர்களே .. 
இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்கள்  கருத்துகளை அனுபவும் நன்றி. 

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector