தேவையானவை:
செய்முறை:
அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.
மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை "ஸிம்"மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து "தம்" போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் "தம்" போடலாம்.
- மட்டன் - அரை கிலோ,
- பாசுமதி அரிசி - இரண்டரை கப்,
- பெரிய வெங்காயம் - 3,
- தக்காளி - 4,
- பச்சை மிளகாய் - 6,
- மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் - அரை கப்,
- நெய் - கால் கப்,
- புதினா - ஒரு கைப்பிடி,
- மல்லித்தழை - ஒரு கைப்பிடி,
- தயிர் - ஒரு கப்,
- உப்பு - 2 டீஸ்பூன்.
- இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.
- அரைக்க: பட்டை - 2,
- ஏலக்காய் - 10,
- கிராம்பு - 2.
செய்முறை:
அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.
மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை "ஸிம்"மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து "தம்" போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் "தம்" போடலாம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்

Thanks for visit |