தலைவலியை சுக்குநூறாக்கும் சுக்கு!

Monday, October 4, 2010



'தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை... சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை'னு சொல்வாங்க. அது நெசந்தான். சுக்குக்கு அவ்வளவு சக்தி இருக்கு. ஜலதோஷ தலைவலியோ... அதிக வேலையால வந்த தலைவலியோ... உடனே நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து, மையா அரைக்கணும். அதோட சுக்கு துண்டு இழைக்கணும் (அதாவது உரசணும்). அதை, வலி உள்ள எடத்துல பூசினா... சட்டுனு தலைவலி போயிரும். நொச்சி இலை கிடைக்கலைனா... வெறும் தண்ணியில சுக்கை இழைச்சி பூசினாலே பலன் கிடைக்கும்.


இதைப்பத்தி ஏற்கெனவே சொல்லிஇருக்கேன். ஆனாலும் புதுசா வாசிக்கிறவங்களுக்கும் போய்ச்சேரட்டுமேனுதான் திரும்பவும் சொல்றேன்.

"என்ன... பித்தம் தலைக்கு ஏறிடுச்சா?"னு சமயத்துல கிண்டல் பேச்சு எட்டிப் பார்க்கும். பித்தம் இருந்தா... வேலையே ஓடாது. ஏடாகூடாமா எதையாச்சும் செய்வோம். இதுமாதிரியான சமயத்துல, சுக்கை தூள் செஞ்சு, எலுமிச்சைச் சாறுகூட கலந்து குடிங்க. பித்தமாவது, சித்தமாவது... எல்லாம் ஓடிப்போயிரும்.


Posted Image


வாயுக்கோளாறு இருந்தா... சுக்கை இடிச்சி, வெல்லம், தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, வடிகட்டுங்க. அதோட தேவையான அளவு பால் சேர்த்து, சாயந்திர வேளைகள்ல தொடர்ந்து 21 நாள் குடிச்சுட்டு வாங்க. வாயுக்கோளாறு காத்தா பறந்துடும்.

வயிறு மந்தமா இருந்தா... சுக்கு, திப்பிலி, சீரகம், மிளகு, இந்துப்பு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சம அளவு எடுத்துக்கோங்க. அதோட, வறுத்த பெருங்காயத்தைக் கொஞ்சம்போல சேருங்க. மொத்தத்தையும் இடிச்சி சலிச்சு, எடுத்து வைங்க. சாப்பாட்டுக்கு முன்ன அரை ஸ்பூன் அளவு எடுத்து, சுடுசோத்துல பிசைஞ்சு சாப்பிடுங்க. சாப்பிட்டதும் சிலருக்கு வயித்துவலிகூட வரும். அதுதான்... ஜீரண சக்தி கிடைக்குதுங்கறதுக்கு அர்த்தம்.

அடுத்ததா மிளகைப்பற்றி சொல்றேன். 'பத்து மிளகு இருந்தா... பகைவன் வீட்டிலும் உண்ணலாம்'ங்கறது பழமொழி.

வறட்டு இருமல், ஜலதோஷத்தால வரக்கூடிய இருமல் இதெல்லாம் குணமாகறதுக்கு... ஒரு டம்ளர் பசும்பால்ல, அரை ஸ்பூன் மிளகை உடைச்சுப் போட்டு கொதிக்க வச்சு வடிகட்டுங்க. இதை, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்ன, 3 நாள் குடிச்சுட்டு வந்தாலே... நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைக்கம்மல், வயித்துல உண்டாகுற வாயுத்தொல்லை நீங்கறதுக்கு மிளகை நல்லா பொடிச்சி, 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கோங்க. அதோட 600 மில்லி தண்ணி சேர்த்து அரை மணி நேரம் கொதிக்க வச்சு வடிகட்டி வச்சிக்கோங்க. அதில 25 மில்லி அளவுக்கு மூணுவேளை குடிச்சாலே... பிரச்னை சரியாயிரும். ஆகலைனா... இன்னொரு வேளை கூடுதலா குடிங்க.

ஜலதோஷம், தலைவலி, சளிப்பிரச்னையால அவதிப்படுறவங்க... மிளகை தீயில சுட்டு, அதோட புகையை மூக்கால உள்ளுக்கு இழுத்தா... நல்ல நிவாரணம் கிடைக்கும்.



உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்

Thanks for visit

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector