எலுமிச்சையின் மருத்துவ குணம்

Monday, October 4, 2010

எலுமிச்சையின் மருத்துவ குணம்

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.

குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட
வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து
சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை
நீக்கி சுத்தப்படுத்தும்.

எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.

தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு
உடல் திறனை வலுப்படுத்துகிறது.

தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.

சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும்.

காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.



நன்றி - தினகரன்
உங்கள் கருத்துகளை எதிர் பார்கிறேன்
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன் 

Thanks for visit

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector