இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள...

Tuesday, January 25, 2011
 உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.  
 இதுதவிர, செம்பருத்திப் பூவை (சிகப்பு - படத்தில் உள்ளது மட்டும்) நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
 நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
 
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
 
 இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். 
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். 


இயற்கையை நம்புங்கள் இன்பங்கள் கோடி இல்லம் தேடி வரும்....
Related Posts Widget For Blogger with ThumbnailsBlogger Widgets

தேங்காய் பர்பி

Monday, January 10, 2011
தேங்காய் பர்பி


தேவையான பொருள்கள்:

தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 3
முந்திரிப் பருப்பு - 8
சர்க்கரை - 1 கப்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* தேங்காயை நைசாகத் துருவிக் கொள்ளவும்.

* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து, நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

* முந்திரிப் பருப்புகளைச் சிறுதுண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும்.

* எல்லாப் பொருள்களையும் நன்றாகக் கலந்து ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மூடாமல் வைக்கவும்.

* 3 1/2 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும். நடுவில் ஒருமுறை லேசாகக் கிளறிக் கொடுக்கவும்.

* மைக்ரோவேவிலிருந்து எடுத்த கையோடு, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.

* சிறிது சூடு ஆறத் தொடங்கியதும், நெய் தடவிய கத்தியால் 3 செ.மீ. சதுரக் கட்டிகளாக வெட்டவும்.

மூன்றரை நிமிடங்களில் தேங்காய் பர்பி தயார்.

HOW TO MAKE Chocolate Cake

Wednesday, November 10, 2010

 How To Make Chocolate Cake

 

This simple chocolate sponge cake recipe is rich and chocolatey. Learn how to make our perfect chocolate cake recipe.

Step 1: You will need:

 • 200 g caster sugar
 • 200 g softened butter
 • 4 medium eggs, beaten
 • 170 g self-raising flour
 • 30 g cocoa
 • 1 tsp baking powder
 • 2 tbsp milk
 • 200 ml double cream
 • 50 g butter
 • 3 tbsp clear honey
 • 200 g dark chocolate
 1. Step 2: Mix

  Heat oven to 190C/fan 170C/gas 5, 375F. Butter two 20cm (8 in) sandwich tins and line with non-stick baking paper.
 2. Step 3: Bake

  In a large bowl, beat together 200g softened butter with 200g caster sugar, 4 eggs, 170g flour and 30g cocoa powder until you have a smooth, soft batter.
  Divide the mixture between the tins, smooth the surface with a spatula or the back of a spoon, then bake for about 20 mins until the top is a beautiful golden colour. The cake should spring back when you press it. Turn it onto a cooling rack and leave to cool completely.
 3. Step 4: Frosting

  For the fudge frosting, heat 200ml double cream until it just begins to boil. Take it off the heat and add 50g butter, 3 tablespoons honey and 200g dark chocolate, which has been broken into pieces. Leave the mixture for five minutes so the chocolate melts, then stir it briefly to combine all the ingredients - don't over-mix it or it will lose its shine.
 4. Step 5: Ice

  Sandwich the cakes with a third of the just-warm frosting and spread the rest over the top and sides. Top with shaved or grated chocolate.


THANKS : VIDEO JUG

Thanks For Vist

HOW To Make Idli


Ingredients
Raw rice - 1/2 cup
Par Boiled rice - 1/2 cup
Urad dhal - 1/4 cup
Fenugreek - 1/2 t.Spoon
Bengal gram - 2 t.spoon
Cashew nuts- 10
Badam - 10
Ginger- small piece
Green chilli - 3
Dates fruit
salt to taste
Oil as required


Method
Clean and soak rice and urad dhal for 1 hour.


Grind it coarsely with fenugreek.


Add salt and leave it undisturbed for 4 hours.


Then heat oil in a pan and season it witn urad dhal, bengal gram, chopped ginger, Green chilli, cashew nuts and badam.


And add it to the batter.


Grease the idli moulds with oil and pour in the batter. .
Steam for about 20 minutes and then demould as you would a regular idli.
Serve hot with chutney / sambhar.THANKS: YOU TUBE

Roasted Tiny Potatoes

Tuesday, November 2, 2010
Roasted Tiny PotatoesPotatoes are favourite food of many people, especially children. Here, we go with small potatoes, to make the Roasted Potatoes. The small potatoes are very attractive and the recipes made out of this vegetables is really tasty and delicious.Ingredients:

Small Potatoes - 1 cup;
Curd - 1 tbsp;
Salt to taste;
Oil for shallow frying.


To be grinded:
 
Onions - 1(big);
Chilli powder - 1/2 tsp;
Dhania powder - 1/2 tsp;
Ginger - 1/2 inch;
Garlic - 6 pods;
Turmeric powder - 1 pinch;
Pepper - 1/2 tsp;
Cloves and cinnanom a little;
Curry leaves a few.Preparation:

1. First, we have to boil the potatoes.


  2. Then, peel of the skin and poke it with the fork spoon, to make tiny holes. 

  3.Mix these potatoes with the grounded paste, curd and enough salt.

   4.Set them aside for atleast two hours.

   5.Heat oil in a kadai, put the entire mixture into it. 


    6.Saute it well, taking care to see that it does not get burnt.

    7.When the raw smell goes out, the potatoes are done.

    8.Your Roasted Tiny Potatoes are ready.

     9.Serve it with rice or chappatti.

      IF YOU LIKE MY POST PLEASE GIVE YOUR COMMENTS
      THANKS 
      MATHAN 
      Thanks for visit

      உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்!

      Sunday, October 31, 2010
      உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்

      • கறுப்புத் திராட்சை
      • பச்சைத் திராட்சை
      • பன்னீர்த் திராட்சை
      • காஷ்மீர்த் திராட்சை
      • ஆங்கூர் திராட்சை
      • காபூல் திராட்சை
      • விதையில்லா திராட்சை
      என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.
      உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

      அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

      நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.

      உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
      மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
      நன்றி !
      மதன்
      Thanks for visit

      வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்கள்!

      குறைந்த செலவில் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை இன்று பார்ப்போம்.

      வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

      அதில், பச்சையாக உட்கொள்ளும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

      மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப் படுத்துவதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

      நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்வதுடன் தேவையான சத்துப் பொருட்களை உடலுக்கு பிரிந்து கொடுகிறது.

      பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடுத்திறது.

      மாரடைப்பில் இருந்து மனிதர்களை காக்கும் மிகப்பெரிய மருத்துவ குணம் இதற்கு உண்டு என்பது கூடுதல் செய்தி.

      இனிமேல் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். பயன் பெறுங்கள்.

      உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
      மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
      நன்றி !
      மதன்
      Thanks for visit

      சீரக‌த்‌தி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள்


      ‌சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
      வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
      சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
      சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
      திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
      அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
      வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
      சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

      உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
      மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
      நன்றி !
      மதன்
      Thanks for visit

      பழங்களின் நிறமும் அதன் குணமும்

      இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
      நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.
      பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.

      சிவப்பு நிறப் பழங்க
      ள்


      கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.
      ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.
      · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
      · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
      · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
      · கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.


      மஞ்சள் நிறப் பழங்கள்
      எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
      · மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.
      · பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.


      வாழைப்பழம்
      - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.
      ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.


      பச்சை நிறப் பழங்கள்
       
       
      பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .
      இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.
      மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.


      ஆரஞ்சு நிறப் பழங்கள்      மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.
      உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.


      நீல நிறப் பழங்கள்      நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும்.
      மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.
      தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.


      மண் நிற பழங்க
      ள்


      சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
      இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  


      உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... 
      மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
      நன்றி !
      மதன்
      Thanks for visit 
       
      INKU VARUKAITHANTHA ANAIVARUKUM EN MANAMARNTHA _/\_NANRI_/\_ MENDUM VARUKA..  இங்கு வருகைதந்த அனைவர்க்கும் என் மனமார்ந்த _/\_ நன்றி_/\_ மீண்டும் வருக..