Kerala spicy fish curry - கேரளா ஸ்பைசி மீன் கறி

Tuesday, September 28, 2010
Nenkal tamil therinthavaraka irukalam anal tamil padika theriyathavaraka irukalam , athanal unkalukaka naan tmail English  muripadi unnkaluku intha kuripai thanthu irukiren ..

ஈசி கேரளா ஸ்பைசி மீன் கறி

தேவையான பொருட்கள்;
மீன் - 1 கிலோ
கொடம்புளி - 4 துண்டு பெரியது அல்லது சிறியது என்றால் 8
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி- 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
கருவேப்பிலை - 3 இணுக்கு
உப்பு - தேவைக்கு

TEVAIYANA PORUDKAL:
Fish - 1 kilo
kodam puli - 4 thundu periyathu -alathu siriyathu enral 8 thundu
Coconut oli - 100 mili 
kaduku - 1tspn
Venthayam - 1tspn
Milakaithool - 1 tspn
Ingi - 50 kiram
Poondu - 50 kiram
Kruvepilai - 3 inuku
Salt - theviyana alavu 











இஞ்சி பூண்டை தோல் நீக்கி இப்படி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
Ingi Pundu thool neki ipadi sirithaka naruki kolavum.



இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடேறியதுன் நறுக்கிய இஞ்சி பூண்டை ஒரு கடாயில் போட்டு வதக்கவும்.
2 tbsp  Coconut oli vidu suderiyathum narukiya ingi poondu irandaiym  podu vathakavum .



இஞ்சி பூண்டு சிவற வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.
வதக்கி ஆறவைக்கவும்.
Ingi poondu nalla vathankiyathum milakaithool serthu sirithu vathakavum .
vathaki aravikavum.





வதக்கிய மசாலாவை நைசாக அரைத்து எடுக்கவும்.
Vathakiya masalavai naisaka arithu edukavum . 



கேரளாவில் மீன் கறி மண்சட்டியில் தான் சமைப்பதுண்டு.எனவே நானும் மண்சட்டியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு ,வெந்தயம் போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போட்டு அரைத்த மசாலாவை போட்டு சிறிது வதக்கவும்.
Kerala fish curry mannsadiyil than samaipathundu . enave nanum mannsadiyil methamulla Coconut oliai vidu kaithathum , kaduku ,venthayam podu vedithathum karuvepilai podu araitha masalavai podu vathakavum.



இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
2 cup water serkavum . nannku kothika vidavum, tevaiyana alavu salt serkavum.



சுத்தம் செய்து மஞ்சள் உப்பு போட்டு அலசிய மீன் துண்டுகளை போடவும்.பெரிய துண்டாக கட் செய்து இருப்பதால் இடையில் கீறி விட்டுக்கொண்டேன்.அத்துடன் கொடம்புளியை தண்ணீரில் அலசி போடவும்.மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.
Sutham seithu manjal salt podu alasiya fish thunndukali podavum. periya thundaka cut sithu irupathal idiyl kiri vidukonden .athudan kodam puliyai water il alaci podavum . mudi podu simil vikavum.




10 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.இறக்கும் முன்பு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விரும்பினால் விட்டு இறக்கவும்.
10 mints kalithu meenai tirupi podu sirithu neram adupai kurithu vaithu irakavum.
Coconut oli virumpinal vidu irakalam . 





சுவையான ஈசி ஸ்பைசி கேரள மீன் கறி ரெடி.இதனை 3 நாட்கள் வெளியே வைத்து சாப்பிட்டாலும் கெடாது.ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைக்கலாம்.வெங்காயம்,தக்காளி,தேங்காய் சேர்க்கவில்லை.ஆனாலும் கேரள உணவு விரும்பிகளுக்கு இது மிகவும் பிடிக்கும். 
Suvaiyana easy  spicy kerala fish curry redy .  ithanai 3 days veliye vaithu sapidalam kedupokathu. frigil 1 week varai vaikalam.venkayam,tomato,Coconut serkavilai .analum kerala curry sapida virupikiravarkaluku ithu mikavum pidikum.


நன்றி :ஆசியா உமர்.
உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன் !
 மதன்
    _/\_ நன்றி_/\_  
 
 

Thanks for visit

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector