எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்

Thursday, September 30, 2010




எள் - சுண்ணாம்புச் சத்தின் களஞ்சியம்


100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் மங்கானிஸ்,
தாமிரம் (copper) , மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்வரம் (Phosporus), வைட்டமின் பி1 (தியாமின்), துத்தநாகம் (zinc), வைட்டமின் இ,
ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக இருக்கின்றன.

முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது.
அதனைச் சமைக்கும் முறையும் மறந்து போய்விட்டது. எள்ளில் செசமின் மற்றும் செசமொலின் என்ற இரு சத்துக்கள் இருக்கின்றன.
இந்த இரு சத்துக்களும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஈரல் சேதத்தையும் தடுக்கின்றன. எள்ளில் உள்ள
வைட்டமின் சி இருதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் சுருக்கத்தைப் போக்கவும் இன்னும் சில சரும நோய்களுக்கும் உதவுகிறது.
உடல் பலவீனமாக உள்ளவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் உரம் பெறும்.

நன்றி - தினகரன்
 மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்

நன்றி !
மதன்



0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector