பட்டர் சிக்கன் எப்படி செய்வது

Sunday, September 26, 2010


Image


தேவையான  பொருட்கள்:
கோழி  - அரை கிலோ , பெரிய வெங்காயம்  -1 கப்  நறுக்கிய தக்காளி -1 கப்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்,மல்லி தூள்-1 டீ ஸ்பூன்,மிளகாய் தூள் -தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது - டீ ஸ்பூன்,வெண்ணை -3 டீ ஸ்பூன்,சிகப்பு கலர் பவுடர் சிறிது .



தாளிக்க :

சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,எண்ணெய்
அரைக்க :
தேங்காய் -அரை கப்,முந்திரி பருப்பு -10
(இவற்றை  தனித்தனியாக அரைத்து கொள்ளவும் )

செய்முறை :
வாணலியில் எண்ணெய் + வெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சள் ,மிளகாய்த் தூள் ,மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி,கலர் பவுடர் , அரைத்த தேங்காய் , இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். கோழி நன்றாக வெந்தவுடன் அரைத்த முந்தரி விழுதை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் வேக விடவும் . அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
இப்பவே முயற்சி பண்ணி பாருங்க அப்புறம் உங்க கருத்துகளை சொலுங்க .. 
Thanks for visit

0 கருத்துரைகள்:

Post a Comment

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Free counters!
Protected by Copyscape Online Plagiarism Detector